முக்கிய செய்திகள் ஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்!

ஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். ஹோல்டர், 229 பந்துகளைச் சந்தித்து 202 ரன்கள் எடுத்தார். அதில், 8 சிக்சர்கள் மற்றும் 23 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார். அதேபோல், பந்துவீச்சில், 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். தரவரிசையில் 440 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியதே, அவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது. வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இந்தியாவின் ஜடேஜா 3-வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 922 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கேன் வில்லியம்சன், புஜாரா ஆகியோர் 3-வது, 4-வது இடங்களில் இருக்கின்றனர். அணிகளுக்கான தரவரிசையில், இந்தியா (116), தென்னாப்ரிக்கா (110), இங்கிலாந்து (108) ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன....

பிந்திய செய்திகள்

03-02-2019

ஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்!

20-01-2019

அவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் நீக்கப்பட்ட நுவன் பிரதீப்

19-01-2019

3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

17-01-2019

பிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கட் தேர்தல்

17-01-2019

சர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறும் ஆண்டி முரே

மேலும் பிந்திய செய்திகளுக்கு

முக்கிய செய்திகள்

24-11-2018

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு!

24-11-2018

இந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது

24-11-2018

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

25-11-2018

6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை

25-11-2018

கோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி! #T20 world cup

மேலும் பிரதான செய்திகளுக்கு

விளையாட்டு

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு