சவுதி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழன்

Print lankayarl.com in விளையாட்டு

தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


முஹமது நயீம் என்ற இளைஞரே இந்த சாதனைக்கு சொந்தகாரர்.இவரது பெற்றோர் தற்போது சவுதிஅரேபியாவில் வசித்து வருகின்றனர் எனினும் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலபட்டினம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர் முஹமது நயீம்.


இந்நிலையில் இவர் சவூதி அரேபியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் இடம்பிடித்த இவர் சவூதிஅரேபியா – தாய்லாந்திற்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் சவூதி அரேபியா கிரிக்கெட் அணியில் தமிழகத்திலிருந்து பங்குபெறும் முதல் தமிழர் என்ற பெருமையை முஹமது நயீம் பெறுகிறார்.