கோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா! 2018

Print lankayarl.com in விளையாட்டு

ஆண்களுக்கான 14வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழா உடன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

இந்தியாவின் புவனேஷ்வரில், ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. 19 நாட்கள் நடக்கும் உலகக்கோப்பையில், பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

ஹாக்கி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, ‘சி பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் 2வது இடம் பிடித்த பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும், இரண்டாவது, மூன்றாவது இடம் பிரிக்கும் அணிகள் குறுக்கு போட்டிகளில் பங்கேற்று கடைசி எட்டு அணிகளில் இடம் பிடிக்கும். கடைசி இடம் பிடிக்கும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும்.