இலங்கை நியூசிலாந்து ரி-20 கிரிக்கெட்:நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி

Print lankayarl.com in விளையாட்டு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.ஒக்லேந் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில் நியூசிலாந்து அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டமாக டக் பிரெஸ்வெல் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்டுகளையும், லசித் மாலிங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 16.5 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக திசர பெரேரா, 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் இஷ் சொதி மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் பிரகாசித்த டக் பிரெஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.