21 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை

Print lankayarl.com in விளையாட்டு

நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 21 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது .இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்ககை அணி, 2-0 என நியூசிலாந்து அணியிடம் இழந்துள்ளது.

மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில், அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரோஸ் டெய்லர் 90 ஓட்டங்களையும், கொலின் மன்ரோ 87 ஓட்டங்களையும், ஜேம்ஸ் நீஸம் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.