நியூசிலாந்து அணி 307 ஓட்டங்கள்

Print lankayarl.com in விளையாட்டு

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டி தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47 ஓவர்கள் நிறைவில் 04 விக்கட் இழப்புக்கு 307 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அந்த அணி சார்பாக Ross Taylor 137 ஓட்டங்களையும் Kane Williamson 55 ஓட்டங்களையும் Henry Nicholls ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

லசித் மாலிங்க 74 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை பெற்றுள்ளார்.