இறுதி போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை

Print lankayarl.com in விளையாட்டு

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.

இப்போட்டி Saxton Oval மைதானத்தில் நடைபெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 364 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணி சார்பாக டைலர் 137 ஓட்டங்களையும் நிகோல்ஸ் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களையும் பெற்றனர்.

லசித் மாலிங்க 93 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை பெற்றுள்ளார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 249 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 80 ஓட்டங்களையும், திக்வெல்ல 46 ஓட்டங்களையும் பெற்றனர்.