3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

Print lankayarl.com in விளையாட்டு

மெல்பர்னில் நடைபெற்ற 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது- இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரையும் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

மெல்பர்னில் தொடங்கிய போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த கவாஜா, மார்ஸ் ஓரளவு நிலைத்து நின்று ஆடினர்.

கவாஜா 34 ரன்களிலும், மார்ஸ் 39 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல்லும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

தொடர்ந்து இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

ஒரு கட்டத்தில் 49வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் 230 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் ஹேன்ட்ஸ்கோம்ப் அதிகபட்சமாக 58 ரன்கள் சேர்த்தார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் அபாரமாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை சாய்த்தார்.