இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி!

Print lankayarl.com in விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. புவனேஷ்வர் குமார் வேகத்தில் பின்ச் 6 அவுட்டானார். அலெக்ஸ் கேரி (18) ரன்கள் எடுத்தார். கவாஜா( 21) ரன்னில் வெளியேறினார். ஜடேஜா சுழலில் பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் (20) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஷான் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷமி பந்து வீச்சில் ஸ்டாய்னிஸ்( 29 )அவுட்டானார். அபாரமாக செயல்பட்ட மார்ஷ் ஒருநாள் தொடரில் 7-வது சதம் எட்டினார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளிக்க ஸ்கோர் உயர்ந்தது. 6-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தபோது புவனேஷ்வர் குமார் பந்தில் மேக்ஸ்வெல் 48 சிக்கினார். ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். ரிச்சர்ட்சன் (2) சிடில் (0) சொதப்ப ஆஸ்திரேலி அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. லியான் (12) , பெஹ்ரன்டர்ப் (1) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.