ஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்!

Print lankayarl.com in விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

ஹோல்டர், 229 பந்துகளைச் சந்தித்து 202 ரன்கள் எடுத்தார். அதில், 8 சிக்சர்கள் மற்றும் 23 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார். அதேபோல், பந்துவீச்சில், 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். தரவரிசையில் 440 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியதே, அவரின் சிறந்த தரவரிசையாக உள்ளது. வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இந்தியாவின் ஜடேஜா 3-வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 922 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கேன் வில்லியம்சன், புஜாரா ஆகியோர் 3-வது, 4-வது இடங்களில் இருக்கின்றனர்.

அணிகளுக்கான தரவரிசையில், இந்தியா (116), தென்னாப்ரிக்கா (110), இங்கிலாந்து (108) ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன.